என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தனிப்படை போலீசார் விசாரணை"
பேராவூரணி:
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பட்டுக்கோட்டை சாலையில் இருசக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவர் முகமது இக்பால் (வயது 55).
இவர் கடந்த 21-ந்தேதி இரவு கடையை வழக்கம் போல் பூட்டி விட்டு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கடையின் பூட்டை உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்து 75 ஆயிரம் ரொக்க பணத்தை திருடி சென்று விட்டனர். மேலும் அருகில் உள்ள ஹசியார், பக்ரீதின் ஆகியோர் நடத்தி வரும் 2 மளிகை கடைகளில் பூட்டை உடைத்து ஹசியார் கடையில் ரூ.20 ஆயிரத்தையும், பக்ருதீன் கடையில் ரூ.3 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடி விட்டு கடையை திறக்க வந்த முகமது இக்பால் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் ரூ. 10 லட்சத்தை எடுத்து சென்று விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதே போல் 2 மளிகை கடைகாரர்களும் தங்களது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து திடுக்கிட்டனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 3 வியாபாரிகளும் பேராவூரணி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் டி.எஸ்.பி. செங்கமல கண்ணன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளை நடந்த கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படைத போலீசார் கொள்ளையில் ஈடுபட்டவர்க்ள யார் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கொள்ளை நடந்த கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது முகமூடி அணிந்து மர்ம நபர் கொள்ளையடிப்பது பதிவாகி இருப்பது தெரியவந்தது. அதன் மூலம் துப்பு துலக்கி வருகின்றனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பேராவூரணி எம்.எல்.ஏ கோவிந்தராசு, பேராவூரணி வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேந்திரன், நகர மாணவர் அணி செயலாளர் கோவி. இளங்கோ ஆகியோர் கொள்ளை நடந்த கடைகளுக்கு சென்று வியாபாரிகளிடம் கொள்ளை நடந்தது பற்றி கேட்டறிந்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல்கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). இவர் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளராக இருந்து வந்தார். மேலும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ரமேஷ் பாபு நேற்று முன்தினம் மதியம் பிடாரி வடக்கு வீதியில் உள்ள தனியார் பஸ் அதிபர் வீட்டுக்கு காரில் சென்ற போது காரில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை பற்றி விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகள் பயன்படுத்தியதாக கூறப்படும் கார், திருக்கடையூர் பகுதியில் போலீசார் மீட்டனர்.
நாகை மாவட்ட அ.தி.மு.க.வில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்த ரமேஷ்பாபு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனிப்படை போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கூலிப்படையினர் ரமேஷ்பாபுவை கொலை செய்துள்ளது தெரிய வந்தது.
அ.தி.மு.க பிரமுகர் ரமேஷ்பாபு ஆரம்ப கால கட்டத்தில் இருந்தே கட்சியில் தீவிரமாக இருந்து வந்தார். கடந்த 2001-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அப்போதைய அ.தி.மு.க. எம்.எல்.ஏவாக இருந்தவரின் வெற்றி பெற வியூகங்கள் வகுத்து தீவிரமாக பணியாற்றினார். பின்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் உதவியாளரானார்.
அந்த நேரத்தில் ரமேஷ் பாபு சிறு சிறு ஒப்பந்த பணிகளை செய்து வந்தார். அதனைத் தொடர்ந்து புறவழிச்சாலை அமைக்க சவுடுமண் சப்ளை செய்யும் ஒப்பந்த பணியில் இறங்கினார். இதில் கோடிக்கணக்கில் பணம் புரள தொடங்கியது.
குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்த ரமேஷ்பாபு அப்பொழுது மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியனிடம் அறிமுகம் ஆகி அவரது ஆதரவாளரானார்.
இந்த நிலையில் வேறொரு மற்றொரு மாவட்ட அமைச்சரின் ஆதரவோடு மாநில அளவில் ஒப்பந்த பணிகளை ரமேஷ்பாபு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் இருந்த ரமேஷ் பாபுவின் செல்வாக்கு மாவட்டம் முழுவதும் அரசியல் ரீதியாகவும், அரசு அதிகாரிகள் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் உயரத் தொடங்கியது.
இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியில் மணல் அள்ளிப்போடும் ஒப்பந்தம் ரமேஷ்பாபுவிற்கு எளிதாக கிடைத்தது. இதனால் அவருக்கு தொழில்ரீதியாக அதிக போட்டிகள் உருவானதாக கூறப்படுகிறது.
தொழில் மற்றும் அரசியல் போட்டியால் முன்விரோதம் கொண்ட யாரோ சிலர் பிரபல ரவுடியின் உதவியுடன் கூலிப்படைகளை அணுகி ரூ.2 கோடி வரை பேரம் பேசி ரூ.1 கோடி முன்பணம் வழங்கியதாகவும், அதன் பின்னர் ரமேஷ்பாபு கொலை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுபற்றி தனிப்படை போலீசார் கூறும் போது,‘ ரமேஷ்பாபு கொலையில் விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம்’ என்று தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்